;
Athirady Tamil News

பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் 5 வருடங்களின் பின் கைது..!!

0

மன்னாரில் பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் 5 வருடங்களின் பின்னர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை செட்டிக்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று புதன் கிழமை (18) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது சந்தேக நபரை எதிர் வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் துஸ்பிரயேக சம்பவம் இடம் பெற்றமை தொடர்பில் பாதீக்கப்பட்டவர்களினால் அன்றைய தினம் மன்னார் காவல் நிலையத்தில் பெண்கள்,சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது சந்தேக நபரை கைது செய்ய மன்னார் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த நபர் தலை மறைவாகியிருந்தார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்முறை அத்தியட்சகரினால் மன்னார் மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவுக்கு விடுஈக்கப்பட்ட பணிப்புரைக்கமைய மன்னார் மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.முனசிங்க தலைமையிலான காவல்துறை குழுவினர் குறித்த நபர் 5 வருடங்களின் பின்னர் கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 12 =

*