;
Athirady Tamil News

மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு..!! (படங்கள்)

0

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் நேற்று புதன் கிழமை(18) மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினையடுத்து மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்ட போதே குறித்த சடலம் காணாமல் போன மனுவேல் பிள்ளை (அல்பேட்) என்பவருடையது என தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரனைகளை மன்னார் காவல்துறையினர் ; மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மதியம் வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − two =

*