;
Athirady Tamil News

அம்பலமாகிய எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமியின் உண்மை முகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! (வீடியோ)

0

புதிய தொலைக்காட்சி சானலான கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ இது மிகவும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கில் 5ஆம் இடத்தில் இருந்து வருகிறது.இதில், இறுதியில் யாரையும் ஆர்யா திருமணம் செய்வில்லை என்று கூறிவிட்டார்.

எனினும், சீதாலட்சுமி தனக்கு token of love கொடுத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், ஆர்யா சீதாலட்சுமியை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டு வருகின்றது

இந்நிலையில், சீதாலட்சுமியின் புகைப்படங்களை சமூகவாசிகள் வெளியிட்டுள்ளனர். இதுதான் சீதாலட்சுமியின் உண்மையான முகம் என்றும் கூறியுள்ளனர்.எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மிகவும் தமிழ் கலாச்சார பெண் போல புடவையில் வரும் சீதாலட்சுமி ஆரம்பத்தில் இப்படிதான் இருந்ததாகவும் , அவர் ஒரு மாடல் என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை, ஆர்யா யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவருடன் இரண்டு வருடமாவது குடும்பம் நடத்த வேண்டும் என்றும், விவாகரத்து போன்ற பிரச்சினை எழக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்கிறது சானல் தரப்பு.இவை எல்லாம் உண்மையா இல்லை பொய்க்குள் ஒரு பொய்யா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − ten =

*