;
Athirady Tamil News

ஜேர்மனியில் அதிகரித்துவரும் யூத வெறுப்பு: ஆதார வீடியோ..!!

0

ஜேர்மனியில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதாக கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

யூதர்களின் பாரம்பரிய தொப்பி அணிந்த இருவர் பெர்லினின் தெருக்களில் நடந்து வரும்போது அரபு மொழி பேசும் மூன்று பேர் அவர்களை மோசமாக திட்டுகின்றனர்.

அவர்களில் ஒருவன் தனது பெல்ட்டினால், யூதர்கள் என அவன் கருதும் அந்த இருவரையும் தாக்குகிறான்.தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் அதை தனது செல் போனில் வீடியோ எடுத்துள்ளார்

இதில் உண்மை என்னவென்றால் அவர் ஒரு யூதரல்ல, இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு அரேபியர். தனது நண்பர் ஒருவர் பரிசளித்த யூதர்கள் அணியும் தொப்பி ஒன்றை அவர் அணிந்திருக்கிறார்.

“பெர்லின் தெருக்களில் ஒரு யூதர் நடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை பொலிசுக்கும், ஜேர்மன் மக்களுக்கும் ஏன் உலகுக்கும் கூட காட்டுவதற்கான ஆதாரமாகவே அந்த வீடியோவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. சேன்ஸலர் ஏஞ்சலா மேர்க்கலின் செய்தி தொடர்பாளர் ஒருவரும் நீதித்துறை அமைச்சரும் இது ஜேர்மன் நாட்டிற்கு ஒரு இழுக்கு என்று தெரிவித்துள்ளனர்.

நாஸிக்கள் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்களைக் கொன்று குவித்து 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், யூதர்களைக் காக்கும் பொறுப்பு ஜேர்மனிக்கு உள்ளது என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மீண்டும் கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் பதவியிலமர்ந்த மேர்க்கல், யூத வெறுப்புக்கு எதிராக போராடுவதற்காகவே ஒரு புதிய கமிஷனர் பதவியை உருவாக்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*