;
Athirady Tamil News

தப்பியோடிய துபாய் இளவரசி பாதுகாப்பாக உள்ளார்: வெளியான தகவல்..!!

0

ஐக்கிய அமீரகத்திலிருந்து தப்பியோடி இந்திய கப்பற்படை உதவியால் பிடிபட்ட துபாய் இளவரசி நாடு திரும்பி விட்டதாகவும் பத்திரமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் மன்னரின் மகளான Sheikha Latifa Al Maktoum (32), தனது தந்தை தன்னை துன்புறுத்துவதாகக் கூறி தனது நண்பர்களுடன் ஒரு கப்பலில் தப்பிச் செல்லும்போது அமீரக மற்றும் இந்திய கப்பற்படையினர் அவர்களைப் பிடித்தனர்.

அமீரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அவரைக் காணவில்லை என்றும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்பது போன்ற செய்திகள் வரத்தொடங்கின

இந்நிலையில் ஊடகம் ஒன்று துபாய் அரசாங்கத்திற்கு நெருக்கமான பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் இளவரசி நாடு திரும்பி விட்டதாகவும், அவர் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் எங்கு எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்பது தெரியாது என்றாலும் அவர் தனது குடும்பத்துடன் இருப்பதாகவும், நன்றாக இருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அந்த நபர் இளவரசி பிடிபட்ட விடயம் துபாய் மற்றும் மன்னரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பெரிதுபடுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் துபாய் இளவரசியை தனது நாட்டிலிருந்து தப்பிக்கச் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய முன்னாள் பிரெஞ்சு உளவாளி ஒருவர் இந்தியா சர்வதேச விதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறி சட்ட விரோதமாகவும் முரட்டுத்தனமாகவும் இளவரசியை பிடிக்க உதவியதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்றாலும் தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*