;
Athirady Tamil News

பாலியல் தொல்லை அளித்த தந்தை- தற்கொலை செய்த பெண்ணின் உருக்கமான கடிதம்! பிரித்தானியாவில் சம்பவம்..!!

0

பிரித்தானியாவில் தன்னிடம் அத்துமீறி தனது வளர்ப்பு தந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக பொலிஸிடம் புகார் அளித்த பின் 4 வாரங்கள் கழித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”அவன் நரகத்தில் சித்திரவதை அனுபவிக்க வேண்டும் “ என்று எழுதி வைத்த பின்னர் Georgia Walsh(16) எனும் அந்த பெண் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தற்கொலை செய்வதற்கு முன்பாக பொலிஸில் அந்த பெண் இவ்வாறு கூறியுள்ளார்

சிறுவயதில் தன் கன்னத்தில் முத்தமிட்டு குட் நைட் சொன்ன நிலை மாறி போக, உதட்டில் தவறான எண்ண ஓட்டத்தில் அவரது தந்தை முத்தமிட தொடங்கியுள்ளார்.பின்னர் நான் தூங்க படுக்கைக்குச் செல்லப் போகிறேன் என்றால், இல்லை என்னை முத்தமிட்ட பின் செல் என்று எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார்.

இரவு தூங்கும் போதும் தவறான எண்ணத்தில் கட்டி அணைப்பது போன்ற, மேலும் பல ஒவ்வாத பாலியல் செயல்களை அவரது தந்தை தொடர்ந்து Georgiaவிடம் செய்துள்ளார்.

இதனால் நான் மிகவும் பயந்து குழப்பிவிட்டேன், இது போன்ற செயல்கள் முதலில் பாலியல் தாக்குதல் என்று எனக்கு தெரியாது போக போக உணர்ந்த தான் பொலிஸில் புகார் அளிக்க முன் வந்தேன்.

இதையடுத்து அந்த இளம் பெண்ணின் கொடூர வளர்ப்பு தந்தையான Connell(36) பொலிஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் அந்த வழக்கில் இருந்து கடந்த வருடம் மார்ச் 17ம் தேதி பிணையில் வெளியே வந்துள்ளார். இதன் பின்னரும் மகளிடம் அவரின் பாலியல் சீண்டல் தொடர்ந்ததால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கதி அனைத்தையும் ஒர் டைரியில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த பெண்ணின் தாயும் அவரது மகள் 13 முதல் 14 வயது இருக்கும் போதிலிருந்தே தினமும் இரவில் அவரது கணவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்துள்ளார்.

இது குறித்து அந்த பெண்ணின் தந்தை Connell நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்மீது சுமத்தப்பட்ட குழந்தை பாலியல் குற்றம் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளையும் நீதிபதி முன்பாக அவர் மறுத்துள்ளார்.

வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் kentல் உள்ள மெய்ட்ஸ்டோன் க்ரோவ்ன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 14 =

*