;
Athirady Tamil News

தாயாரின் கண் முன்னே பேருந்துடன் எரிந்து சாம்பலான இளம்பெண்: கண்ணீரில் குடும்பம்..!!

0

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பாடசாலை பேருந்து ஒன்று திடீரென்று தீபற்றி எரிந்ததில் மாணவி ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அலட்சியம் மற்றும் தவறான மரணத்தை ஏற்படுத்தியது என குற்றஞ்சாட்டி குறித்த பாடசாலை மீது வழக்கு தொடுக்க மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாடசாலை நேரம் முடிந்த பின்னர் Megan Klindt பாடசாலை வாகனத்திலேயே வழக்கம் போல வீடு திரும்பியுள்ளார்.

அவர்களது வீட்டுக்கும் சில அடி தூரத்தில் வைத்து குறித்த வாகனமானது சிறிய பள்ளம் ஒன்றில் இறங்கியுள்ளது.

அதில் இருந்து மீட்கும் பணியில் ஓட்டுனர் Donald Hendricks(74) முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், அந்த பேருந்து திடீரென்று தீபற்றி எரிந்துள்ளது

இதை நேரில் பார்த்து நின்றிருந்த மேகனின் தாயார் நடாலி தமது மகளை காப்பாற்றவும் பேருந்தில் பற்றிய தீயை அணைக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் வீணானது. இதனிடையே பேருந்து ஜன்னல் ஒன்றில் ஓட்டுனர் டொனால்டு வெளியேற முயன்று கொண்டிருந்தார்.

அவரிடம் நடாலி தமது மகளை காப்பாற்ற கெஞ்சியுள்ளார். ஆனால் அவரது மகளை தம்மால் கண்டுபிடிக்க முடியவிலை என கூறியுள்ளார்.

இதனிடையே பேருந்தின் கரும்புகையை சுவாசித்தும் நெருப்பு காயங்களாலும் மாணவி மேகனும் ஓட்டுனர் டொனால்டும் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து கண்ணாடியை உடைத்து தமது மகளை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்டும் நடாலியால் முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையிலேயே தற்போது பாடசாலை மீது வழக்கு தொடுக்க நடாலி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − twelve =

*