;
Athirady Tamil News

ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் பாரிய அனர்த்தம்; 05 பேர் பலி; முகாமையாளர் கைது..!

0


ஹொரண, பெல்­லம்­பிட்­டி­ய­வி­லுள்ள இறப்­பர் தொழிற்­சா­லை­யில் விஷ வாயுக் கசி­வால் 5 பேர் உயி­ரி­ழந்­த­னர். 15 பேர் பாதிக்­கப்­பட்டு ஹொரண மருத் துவ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தொழிற்­சா­லை­யி­லுள்ள அமோ­னியா தாங்­கி­யைச் சுத்­தம் செய்ய முயன்ற ஒரு­வர் அதற்­குள் தவறி வீழ்ந்­தார் என­வும், அவ­ரைக் காப்­பாற்ற முயன்ற பிர­தேச மக்­கள் உள்­ளிட்ட தொழிற்­சாலை ஊழி­யர்­கள் சுய­நி­னை­வி­ழந்­த­னர். அவர்­கள் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

பின்­னர் சிகிச்சை பய­ன­ளிக்­காது தொழிற்­சா­லை­யின் ஊழி­யர்­கள் இரு­வ­ரும் பிர­தேச மக்­கள் 3 பேரும் உயி­ரி­ழந்­த­னர். விஷ வாயு­வைச் சுவா­சித்­த­தால் இந்த உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டன என்று மருத்­து­வர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பில் ஹொர­ணைக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­ரின் கீழ் விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­ பொ­லிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­சர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தார்.

தொழிற்­சா­லை­யில் அமோ­னி­யம் தாங்கி உள்­ளிட்ட இர­சா­யன பதார்த்­தங்­கள் உள்ள பகு­தி­க­ளில் பின்­பற்­றப்­பட வேண்­டிய பாது­காப்பு வழி முறை­கள் எது­வும் பின்­பற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது ஆரம்­பக்­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­க­ளில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

அத­னை­ய­டுத்து அந்த நிறு­வன முகா­மை­யா­ள­ரைக் கைது செய்­த­தா­க­வும் பொலிஸ் அத்­தி­யட்­சர் ருவன் குண­சே­கர தெரி­வித்­தார்.

23,28,32,41,44 வய­து­டை­ய­வர்­களே உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. நேற்று மதி­யம் 1.20 அள­வில் தொழிற்­சா­லை­யின் அமோ­னி­யம் தாங்கி உள்ள இடத்­தில் அத­னு­டன் தொடர்­பு­டைய சேவை­யில் ஈடு­பட்­டி­ருந்த சேவை­யா­ளர்­க­ளில் இரு­வர் தவ­று­த­லாக வீழ்ந்­துள்­ள­னர். அந்த இடத்­துக்கு அரு­கில் இருந்­த­வர்­க­ளுக்கு தக­வல் அளிக்­கப்­பட்­டது.

தொழிற்­சா­லை­யின் ஊழி­யர்­க­ளு­டன் சேர்ந்து பிர­தேச வாசி­க­ளும் அந்த இரு­வ­ரை­யும் மீட்க முற்­பட்­டுள்­ள­னர். இதன்­போதே ஏனைய மூவர் உயி­ரி­ழந்­த­னர்.

15 பேர் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளாகி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைப் பெற்று வரு­கின்­ற­னர்.

“நாம் சாப்­பிட்­டுக்­கொண்­டி­ருந்­தோம். அங்­கி­ருந்த மிஸ் ஓடி வந்து இரு சேர் மார் விழுந்­துள்­ள­னர் என்று கூறவே நாம் அவ்­வி­டத்­துக்கு ஓடிச் சென்­றோம். இதன்­போது அவர்­களை மீட்­கும் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன. தாங்­கி­யின் மேற்­ப­கு­தி­யில் உள்ள கம்­பி­யைப் பிடித்த வண்­ணம் தாங்­கி­யி­னுள் இருப்­போரை மீட்க நட­வ­டிக்­கை­களை அங்­கி­ருந்­த­வர்­கள் எடுத்­த­னர். இதன்­போது வாயு­வின் அதிக தாக்­கம் கார­ண­மாக அங்­கி­ருந்­த­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ராக மயங்கி விழ ஆரம்­பித்­த­னர்” என்று சம்­ப­வத்தை நேரில் பார்த்த அந்­தப் பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒரு­வர் தெரி­வித்­தார்.

பொலி­ஸார் இது குறித்து முன்­னெ­டுத்த ஆரம்­ப ­கட்ட விசா­ர­ணை­க­ளின்­ போது, “குறித்த இரு சேவை­யா­ளர்­க­ளும் அமோ­னி­யம் தாங்­கி­யில் இருந்து செல்­லும் குழா­யொன்­றில் ஏற்­பட்ட வாயுக்­க­சிவை சரி செய்­யவே அந்த இடத்­தில் கட­மை­க­ளுக்குச் சென்­றுள்­ள­னர்.

அதன்­போது அவர்­கள் தவ­று­த­லாக அன்றி, அதிக வாயுத்­தாக்­கம் கார­ண­மாக மயங்கி அமோ­னி­யம் தாங்­கி­யி­னுள் விழுந்­தி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கும்படி­யாக வாக்குமூலங்­க­ளும் சான்­று­க­ளும் கிடைக்­கப் பெற்­றுள்­ளன.

தொழிற்­சா­லை­யில் அமோ­னி­யம் உள்­ளிட்ட இர­சா­ய­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்ட போதும், இர­சா­யன பயன்­பாடு தொடர்­பி­லான எந்­த­வொரு பாது­காப்பு வழி­மு­றை­யும் அங்கு பின்­பற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது தெரி­ய­ வந்­தது.

அது தொடர்­பில் தொடர்ந்து விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன“ என்று பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து உட­ன­டி­யா­கக் குறித்த தொழிற்­சாலை பகு­திக்கு தீவிர பாது­காப்பு வழங்­கப்­பட்டு அமோ­னி­யம் தாங்கி உள்ள பகு­திக்கு வெளி­யார் செல்­வதை தடுத்து முத­லில் வாயுக் கசிவு தொடர்­வ­தை­யும் அது பர­வு­வ­தை­யும் பொலி­ஸார் தடுத்­துள்­ள­னர்.

பின்­னர் அவ்­வி­டத்­துக்கு ஹொரனை பதில் நீதி­வான் சம்­பவ இடத்­தில் விசா­ரணை நடத்­தி­னார். உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் சட­லங்­கள் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­க­ளுக்­காக ஹொரணை மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த அமோ­னி­யம் தாங்கி சிமெந்து மற்­றும் கல்­லால் அமைக்­கப்­பட்­டது. அதற்கு வரும் குழாய்­கள் உள்­ளிட்ட எவை­யும் பாது­காப்­பா­கப் பொருத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்த நிலை­யில் அவ­சி­ய­மான பாது­காப்பு நடை­மு­றை­களை பின்­பற்­றாது உயி­ரி­ழப்­புக்கு கார­ண­மா­னார் என்ற குற்­றச்­சாட்­டில் குறித்த தொழிற்­சா­லை­யின் முகா­மை­யா­ளர் கைது செய்­யப்­பட்­டார்.

கங்­கா­ராம வீதி­யைச் சேர்ந்த ரத்­ன­சிறி எதி­ரி­சிங்க என்­ப­வரே கைது செய்­யப்­பட்­டார் என்று பொலிஸ் பேச்­சா­ளர் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one − one =

*