;
Athirady Tamil News

புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்: அபராதம் விதித்த நீதிபதி..!!

0

கனடாவைச் சேர்ந்த ஒரு மனிதனின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளால் விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து 17,450 டொலர்களை அபராதம் விதித்து கியூபெக் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கனடாவிலிருந்து கியூபாவிற்கு புறப்பட்ட விமானம் ஒன்றில் ஏறிய Charalabos Nassios என்னும் மனிதன் விமானத்தில் முரடுத்தனமாக நடந்து கொண்டதோடு சக பயணி ஒருவரை தாக்கியுள்ளான்.

மேலும் அவன் மிரட்டல்களும் விடுத்ததையடுத்து இரண்டு அமெரிக்க போர் விமானங்களின் வழி நடத்துதலின்கீழ் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திருப்பப்பட்டது

இதனால் சக பயணிகளுக்கும் விமான நிறுவனத்திற்கும் பொருள் மற்றும் நேர இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி Pierre Dupras, விமான எரிபொருள் செலவு, விமானத்தை லேண்ட் செய்வதற்கான செலவு, விமான ஊழியர்களின் ஓவர்டைம் சம்பளம் மற்றும் 170 பயணிகளுக்கான ஹோட்டலில் தங்கும் செலவு ஆகிவற்றை சேர்த்து 17,450 டொலர்களை அபராதமாக செலுத்துமாறு Nassiosக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த தொகையை மூன்றாண்டுகளுக்குள் அவன் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − six =

*