;
Athirady Tamil News

திருகோணமலை: 4 வாய்வெடிகளை வைத்திருந்த நபர் கைது..!

0


திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்றிக்கு வைக்கும் கக்கப்பட்டாஸ் (வாய் வெடிகள்) நான்கினை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கித்துல் ஊற்று, அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கித்துல் ஊற்று காட்டுப் பகுதியில் பன்றிக்கு வைக்கும் கக்கப்பட்டாஸ் (வாய் வெடிகளுடன்) நடமாடித் திரிந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நான்கு கக்கப் பட்டாஸ்சுகளுடன் கைது செய்து அக்போபுர பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு இன்று (20) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*