;
Athirady Tamil News

லண்டனில், “புலியாதரவு” புலம்பெயர் தழிழர்களால், முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்..! (படங்களுடன் இணைப்பு செய்தி)

0


லண்டனில், புலியாதரவு புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்..! (படங்களுடன் இணைப்பு செய்தி)

பொதுநலவாய உச்சிமாநாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றுள்ள நிலையில், உச்சிமாநாடு இடம்பெறும் பகுதிக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

பங்கிங்காம் அரண்மணைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலிக்கொடியையும் காணாமல் போனவர்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது உட்பட பல விடயங்களை வலியுறுத்தும் பதாகைகளையும் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” அழைப்பு விடுத்து இருந்ததும்,

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எமது தலைவர் பிரபாகரன் (Our Leader Pirabaharan), எமக்கு வேண்டும் தமிழீழம் (We Want Tamileelam), மைத்திரியே திரும்பிப் போ (Go Back Maitthiri), எமக்கு நீதி வேண்டும் (We Want Justice)” போன்ற கோஷங்களை முழக்கமிட்டதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 4 =

*