;
Athirady Tamil News

வவுனியா காடுகளில் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிப்பு..!! (படங்கள்)

0

????????????????????????????????????
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மடுக்குளம் மற்றும் வேலங்குளம் ஆகிய பிரதேசங்கள் இறுதியுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மக்கள் மீள் குடிNயுற்றம் செய்யப்பட்ட கிராமங்களாக காணப்படுகின்றது. மடுக்குளம் மற்றும் வேலங்குளம் கிராமங்கள் காடுகள் சூழ்ந்ததாக காணப்படுவதுடன் இப்பிரதேசங்களைச் சூழு முப்படையிரும் முகாம்களை அமைத்து பாதுகாப்பு வழங்கிவரும் நிலையில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.

பூவரசங்குளத்தை ஊடறுத்து செல்லும் வவுனியா மன்னார் பிரதான வீதியிலிருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மடுக்குளம் பிரதேசத்திலுள்ள காடுகளில் பாலை மரங்கள் மற்றும் முதிரை மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
மடுக்குளம் கிராமத்தில் வசித்துவரும் தனிநபர் ஒருவரே அரச அதிகாரிகளின் துணையுடன் காடுகளை அழித்து வருவதாக பிரதேச வாசிகள் குற்றஞ்சாட்டினர்.

மடுக்குளப் பிரதேசத்தில் அமைந்துள்ள காடுகளில் பெறுமதி மிக்க மரங்கள் காட்டு இலாகா அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு இலஞ்சம் வழங்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிட்ட கிராம மக்கள் மடுக்குளம் பிரதேசத்திலுள்ள காடுகளை சுற்றிலும் முப்படையினரின் பயிற்சி முகாம்களும் பாதுகாப்பு அரண்களும் நிறைந்துள்ள நிலையில் காடுகள் வெட்டி அழிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினர்.

மடுக்குளம் காட்டுப்பகுதியில் தேன் எடுத்து வாழ்வாதாரத்தை நடத்திவரும் பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கையில்,

இது எமது பூர்விகமான காடு, எமது பாட்டன் பூட்டன் பரம்பரை பரம்பரையாக இக்காட்டை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்திருந்தனர். அதனால் இக்காட்டுப்பகுதியை நாங்கள் பாதுகாத்தும் வருகிறோம். காட்டுப்பகுதியில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு காடு அழிக்கப்ட்டு வருவதானது எங்கள் வாழ்வாதாரங்களையும் அழிவடையச் செய்துள்ளது அரசாங்கத்தின் காட்டுப்பகுதியில் சிலருக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவணங்கள் வழங்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. அரச அதிகாரிகளினால் வழங்கப்படும் அவணங்களில் பல வருடங்களுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொலிசார் கிராமவாசிகளை நீங்கள்தான் மரங்களை வெட்டுகிறீர்கள் என குற்றஞ்சுமத்தி வருகின்றனர். பொலிசாருக்கு இரவு நேரங்களில் வாகனங்களில் மரம் கடத்தப்படுவதாக ஆதாரங்களுடன் தகவல்களை கிராமவாசிகள் வழங்கி வருகின்றபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் உடனடியாகவே விடுதலை செய்யப்படுவதாக குறிப்பிட்டனர். சில நேரங்களில் பொலிசாரே குற்றவாளிகளிடம் தகவல் தருபவர்களை காட்டிகொடுக்கும் அவலங்கள் நேர்ந்துள்ளது என கவலை வெளியிட்டனர்.

காடுகள் அழிக்கப்படுவதை தட்டி கேட்பதற்கு அதிகாரம் படைத்த அமைப்புக்கள் இருந்தும் அவைகள் வாய் மூடி மௌனமாகவே இருக்கிறார்கள். அப்பாவி, படிக்காத பாமர மக்களை வதைப்பதற்கே காட்டு இலாகா திணைக்களம் செயற்பட்டு வருகிறது. எமது பிரதேச காடுகளை பாதுகாப்பதன் மூலமே எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க முடியும்.

எமது பிரதேத்தில் காட்டு வளங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக காட்டில் வசிக்கும் மிருகங்கள் கிரமத்திற்குள் உள்நுழைந்து அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக மழைவீழ்ச்சி இன்மையால் எமது கிராமம் வரட்சியை எதிர்நோக்கியுள்ளதுடன் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மடுக்குளம் பிரதேச காடுகள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனே அழிக்கப்பட்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 4 =

*