;
Athirady Tamil News

டைனமைட் பாவித்து மீன்பிடிக்க முற்பட்ட மீனவர் கைது..!!!

0

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சல்லி பிரதேசத்தில் இன்று காலை டைனமைட் பாவித்து மீன்பிடிக்க முற்பட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபரை கைதுசெய்தனர்.

அவரிடமிருந்து 2 கிலோ டைனமைட் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்னர்.

கைதுசெய்யப்பட்ட நபர் 49 வயதுடையவரென்றும் சல்லி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தாக விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + twenty =

*