;
Athirady Tamil News

சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டி கொழும்பில் ஆர்ப்பாட்டம்..!!

0

இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டியும், கண்டித்தும் இன்று(20) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தாணிகராலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் இந்தஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தினை ஜக்கிய சமாதான முன்னணியின் தலைவா் மொஹம்மட் மிப்லால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

காலி முகத்திடலில் இருந்து அமைதியாக பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமி ஆசிபாவின் கொலை, பாலியல் வன்முறையை வன்மையாக கண்டிப்பதாகவும் இக் குற்றவாளிகளுக்கு துாக்குத் தண்டனை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.

இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியு இந்தியப் பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*