;
Athirady Tamil News

ஹொரண இறப்பர் தொழிற்சாலை பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது…!!

0

ஹொரணை – பெல்லப்பிட்டிய பகுதியில் உள்ள இறப்பர் கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள் நிறைவடையும் வரை அந்த தொழிற்சாலை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த அறிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிாரசபையின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

ஹொரணை – பெல்லப்பிட்டிய பகுதியில் உள்ள இறப்பர் கைத்தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் தற்போது ஹொரண வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இறப்பர் கைத்தொழிற்சாலையின் முகாமையாளர் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 1 =

*