;
Athirady Tamil News

உலக முக்கியத்துவம் வாய்ந்த விவசாய மரபுரிமை ஸ்தலமாக இலங்கை பிரகடனம்..!!

0

இலங்கையின் குளத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமியக் கட்டமைப்பு (எல்லங்க கம்மான) என்ற கமத்தொழில் முறைமையானது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவசாய மரபுரிமை முறைமையாக (GIAHS) ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனத்தால் (FAO) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பெறுமதிவாய்ந்த விருது FAO தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் அதன் பிரதி பணிப்பாளர் நாயகம் மரியா ஹெலெனா செமெடோவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருதை இலங்கையின் சார்பாகவும், குறிப்பாக, ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் இலங்கையில் நீரியல் தொடரிணைப்பு பொய்கைகளையும், குளங்களையும் உருவாக்கி, பராமரித்து வந்த உலர் வலய விவசாயிகளின் பெயராலும் விவசாய அமைச்சின் செயலாளர் பி.விஜேரட்ன பெற்றுக் கொண்டார்.

இலங்கையின் ‘எல்லங்க கிராம முறைமையானது’ சமீபத்தில் இத்தாலியில் இடம்பெற்ற புதிய GIAHS ஸ்தலங்களுக்கான சர்வதேச மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில் அங்கீகாரம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + three =

*