;
Athirady Tamil News

மாவட்ட பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது..!! (படங்கள்)

0

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும்கலாசார அலுவலல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

மாலை 2.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வின் முதன்மை விருத்தினராக முன்னால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவி பணிப்பாளருமான உடுவை எஸ் தில்லை நடராசா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் நாதஸ்வர இசையுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது கிளிநொச்சி மாவட்ட கலைஞர்களின் நடன நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தன. இந்நிகழ்வில் கலைஞர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும். நிகழ்வில்கிளிநொச்சி மாவட்டத்தின் கலைகள் அழிவடைந்து வருகின்றமை தொடர்பில் அரசாங்க அதிகர் கருத்து தெரிவித்திருந்தார்.

.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − one =

*