;
Athirady Tamil News

கோல்கத்தா கப்பலுக்கு வழி விட்டது பாம்பன்: குஜராத் கப்பலுக்கு தடை..!! (வீடியோ)

0

கோவாவில் இருந்து பாம்பன் வழியே கோல்கத்தா செல்வதற்கு 2 மிதவை கப்பலும் பாம்பன் தூக்கு பாலம் வழியாக கடந்து சென்றன.அத்துடன் கடல் நீரோட்டம்

அதிகமாக இருப்பதாலும் ரயில் பாலத்தில் வர இருப்பதாலும் நேரம் கருதி ஒடிசாவில் இருந்து குஜராத்துக்கு தூக்கு பாலம் வழியாகச் செல்ல இருந்த பல்கர் பார்ஜர் இழுவை கப்பல் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதில் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் கோவாவில் இருந்து கோல்கத்தா செல்வதற்கு வந்த 2 மிதவை கப்பலும்
அத்துடன் வடக்கு பகுதியில் ஒடிசாவில் இருந்து குஜராத் செல்ல இருந்த இழுவை கப்பலும் அந்தந்த
பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அலுவலகத்தை தொடர்பு
கொண்டு கடந்து செல்வதற்கு பாம்பன் தூக்கு பாலம் வழியாகச் செல்ல மனு அளித்தனர்.

இதில் தெற்கு பகுதியில் இருந்து வடக்காகச் செல்லும் கப்பல்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்கின்றன. அந்த வகையில் இன்று கோவாவில் இருந்து கோல்கத்தா செல்லும் 70 மீட்டர் நீளமும், 1200 டன் எடையும் கொண்ட மோகன்பகான் என்னும் பார்ஜர் கப்பல் மற்றும்
கூடங்குளத்தில் இருந்து சென்னை காட்டுப்பள்ளிக்குச் செல்லும் கேபி 2 என்னும் இழுவைக் கப்பலும் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன.

இதேபோல ஒடிசா தாம்ராவில் இருந்து குஜராத் சிக்கா செல்ல வேண்டிய 70 மீட்டர் நீளமும் 1300 டன் எடையும் கொண்ட பல்கர் 2 பார்ஜர் கப்பல், கடல் நீரோட்டம் அதிகரித்ததால் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்று பாலத்தை
கடக்க முடியாமலும் மதியம் ரயில்வே பாலத்தில் ரயில் கடக்கு இருப்பதால் நேரம் ஆகி விட்டதாலும் தூக்கு பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை.
அந்தக் கப்பலை பாம்பன் கடலில்
நிறுத்தி வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*