;
Athirady Tamil News

உலகின் 95 சதவித மக்கள் ஆரோக்கியமற்ற காற்றை சுவாசிக்கின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

0

உலகில் உள்ள 95 சதவித மக்கள் சுகாதாரக் குறைவான காற்றை சுவாசிப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூஸெட்ஸில் உள்ள HEI என்ற அமைப்பு, உலக சுகாதாரம் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறுகையில்,உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள காற்றுமாசு அளவை, 60 சதவித நாடுகள் இன்னும் எட்டவில்லை என்றும், நகரமயமாக்கல் காரணமாக வளரும் நாடுகளில் இப்பிரச்சனை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘காற்று மாசுவால் கடந்தாண்டு இறந்த 50 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்

2016ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் மக்கள் காற்று மாசு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் 2010ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, காற்று மாசுபாட்டின் அளவு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + ten =

*