;
Athirady Tamil News

என் இதயத்தை நீயும் காதலிக்கிறாய்: இரண்டாம் உலகப்போரின் போது எழுதப்பட்ட காதல் கடிதம்..!!

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது மனைவி பார்பரா புஷ்க்கு 1943 ஆம் ஆண்டு எழுதிய காதல் கடிதம் தற்போது வைரலாகியுள்ளது.

1943 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது U.S. Navy pilot- ஆக புஷ் இருந்தபோது, இந்த காதல் கடிதத்தை எழுதியுள்ளார்.அந்த கடிதம் தற்போது வைரலாகியுள்ளது.

மை டார்லிங் பார் நான் உ ன்னை காதலிக்கிறேன். விலைமதிப்பற்ற, என் இதயத்தை நீயும் காதலிக்கிறாய் என்று எனக்கு தெரியும். நம் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். நம் குழந்தைகள் உங்களைப் போன்ற ஒரு தாய் கிடைக்க எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.இந்த கடிதம் எழுதும்போது ஜார்ஜ் புஷ்க்கு வயது 18. பார்பரா புஷ்க்கு வயது 17.

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்-ஐ கடந்த 1941 ஆம் ஆண்டு முதன் முறையாக சந்தித்த பார்பரா, 4 ஆண்டுகள் காதலுக்கு பின்னர், 1945 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட 72 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த புஷ் பார்பரா தம்பதியினர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் திருமண உறவில் நீடித்திருந்த ஜனாதிபதி தம்பதியர் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.பார்பரா உடல்நலக்குறைவு காரணமாக 18 ஆம் திகதி உயிரிழந்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − six =

*