;
Athirady Tamil News

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சியில்..!! (படங்கள்)

0

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது நேற்று காலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைத்தானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் பங்குபற்றி இருந்தனர்

வரோட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சக்கர நாற்காலி மரதன் , சுவட்டு நிகழ்வுகள் மற்றும் ஒரு காலினை இழந்த வர்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி என்பன இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான கிளறேசியன் சபை முதல்வர் அருட்தந்தை ரெக்ஸ் கொன்சன்ரைன் கலந்துகொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்ததுடன் வரோட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஏகலைவம் ஆவணப்படக் குழுவினரான ஊடகவியலளார் எஸ்.என்.நிபோஜன் ,கவிஞர் பிரியன் ,ஒளிப்பதிவாளர் சுகந்தன் திரைக்கதையாளர் சுவர்ணன் ஆகியோருக்கான கெளரவிப்பினையும் செய்துவைத்தார்

இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு உத்தியோகத்தர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*