;
Athirady Tamil News

தெருக் கூட்டுவதற்கு தென்னிலங்கையுடன் ஒப்பந்தம் செய்கிறார் யாழ் மாநகர முதல்வர்..!!

0

யாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கி எழில் மிகு நகரமாக்கவோம் என்று சொல்லி ஈ.பி.டி.பியின் உதவியுடன் ஆட்சியை பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ் மாநகரின் தெருக்களை கூட்டுவதற்கு தென்னிலங்கையுடன் ஒப்பந்தம் செய்யும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆட்சி அதிகாரம் ஏறியவுடன் தாம் ஏறிவந்த ஏணியை மறந்தவிடுவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது வரலாற்று பெரும்பணிகளில் ஒன்று.

ஆனாலும் இம்முறை அந்த வரலாற்று பணியுடன் இன்னுமொரு அஸ்திரத்தையும் எடுத்துள்ளார் அந்தக் கட்சியின் சார்பிலான யாழ் மாநகர முதல்லர் ஆர்னோல்ட்.

யாழ் மாநகரை சுத்தமாக்குவதற்காக பலவகையான முன்மொழிவுகள் ஆலோசனைகளை பலதரப்பினர் ஆராய்ந்துவரும் நிலையில் முதல்வர் ஆர்னோல்ட் புதுக் கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது யாழ் மாநகரசபை அழகு இழந்து காணப்படுவதற்கு யாழ்ப்பாணத்து சுத்திகரிப்புத் தொழிலாளிகளது தரமின்மையே காரணம் என்றும் அதனால் தென்னிலங்கையிலிருந்து ஒரு தொகுதி ஊழியர்களை யாழ் மாநகருக்கு வரவழைத்து யாழ் மாநகரை அழகுபடுத்த முடியும் என்று அந்த கண்டுபிடிப்பை அவர் மேற்கொண்டுள்ளார்.

தம்பி ஆர்னோல் அவர்களே!… நாம் ஒன்றை உங்களிடம் கேட்கின்றோம். அதாவது கடந்த காலங்களில் யாழ் மாநகரை ஆட்சி செய்துவந்த உங்களது கட்சியின் தரப்பானாலும் சரி ஈ.பி.டி.பியின் தரப்பானாலும் சரி இதுவரை எந்தவொரு தென்னிலங்கையரையும் யாழ் மாநகரின் சுத்திகரிப்பிற்காகவோ அன்றி இதர தேவைகளுக்காகவோ உள்வாங்கவில்லை.

அவர்கள் யாழ்ப்பாணத்து ஊழியர்களைக் கொண்டு அதுவும் உங்களது பகுதியையும் அதை அண்டிய பகுதியையும் சேர்ந்த மாநகர ஊழியர்களை கொண்டே இந்த மாநகரை அழகு படுத்தி வந்தனர்.

இறுதியாக யாழ் மாநகரை ஆட்சி செய்த ஈ.பி.டிபி. கட்சியும் தென்னிலங்கை அரசுடன் இணைந்து ஆட்சி அதிகரத்தை கொண்டிருந்தாலும் அந்தக் கட்சி தனது கொள்கை நிலைப்பாட்டுக்கு இணங்க யாழ் மாநகரை அண்டிய பல நூறு பேருக்கு தெழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து அந்த ஊழியர்களைக் கொண்டே யாழ் மாநகரை அதுவும் யுத்தத்தால் அழிந்த கிடந்த யாழ் மாநகரின் வீதிகளை காப்பெற் வீதியாக்கியது. சிதைந்து சிதலங்களாக கிடந்த கட்டடங்களை வானுயர மீண்டும் கட்டியெழுப்பிக்காட்டியிருந்தது.

யாழ் மாநகரில் தமிழரது வரலாற்று சின்னங்களையும் தமிழரை ஆண்ட மன்னர்களையும் கல்வியின் பொக்கிஷங்களையும் மீண்டும் புத்தாக்கம் காணச் செய்ததுடன் புதிதாகக் கட்டியும் அழகு பார்து யாழ் மாநகரை மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் அழகுபடுத்தியிருந்தது.

ஆனாலும் சில ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் எவரது கரங்களுக்கும் வழங்கப்படாது ஆணையாளரின் கரங்களில் மாநகரம் இருந்தமையால் யாழ் மாநகரம் மீண்டும் அழகிழந்து வீதியெங்கும் துர்நாற்றமும் குப்பை கூழங்களும் குவியல் குவியலாக காட்சிப்பொருளாக தன்னை காட்சிப்படுத்தி மா நரகமாக காட்டியளித்தது.

இதை தற்போது தென்னிலங்கையுடன் இணக்க அரசியல் என்று சரணாகதி அரசியல் செய்யும் உங்களது தரப்பினர் கூட கண்டும் காணாது இருந்தவிட்டனர

இந்நிலையில் தற்போது ஆட்சி அதிகாரம் உங்களது குருநாதரது விருப்பிற்கிணங்க தங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் கடந்தகாலத்தில் நடந்த அத்தனை விடயங்களையும் மாற்றியமைக்க முயற்சிப்பதாக தெரிகின்றது.

மாற்றங்கள் செய்யவேண்டும் என்து வரவேற்கத்தக்கதே. ஆனாலும் மாற்றம் என்ற பெயரில் எமது பகுதியில் உள்ள தொழில்வாய்ப்ப வழங்களை தென்னிலங்கைக்கு கூறுபோட்டு கொடுப்பதனால் உங்களது கைதான் நிறைந்து அழகுறுமே தவிர யாழ் மாநகர் ஒருபோதும் அதனால் பொருமை கொள்ளாது.

ஏனெனில் சொந்த வீட்டுக்காரன் தனது வீட்டை துப்பரவு செய்வதை விட வெளியிடத்து வேலைக்காரன் துப்பரவு செய்வது வித்தியாச்ப்படத்தான் செய்யும்.

அதிலும் தாங்கள் ஒரு காப்பறுதி நிறுவனத்தின் முகாமையாளராக இருந்தமையால் எப்படியெல்லாம் சாமர்தியமாக நடவடிகட்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை நன்க கற்றுத் தேர்ந்தவர் நீங்கள்.

அதனால்தான் தமது தொழிலை மட்டுமல்லாது எதிர்காலத்தில் தமக்கு தொழில் கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கும் பலருக்கு இனி தொழில் வாய்ப்பக் கூட நீங்கள் கொடுக்க முன்வரமாட்டீர்கள் என்று மாநகர தொழிலாழிகள் மட்டுமல்லாது யாழ் மாநகர வறிய மக்களும் குமுறுகின்றனர்.

அதனால் தான் சொல்கிறார்கள் நம்மூர் தெருவைக் கூட்ட தம்பி ஆர்னோல்ட் தென்னிலங்கையுடன் வியாபார பங்காளியாகப் போறார் என்று

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 12 =

*