;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பல்கலை மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்க முன்னணி நிபந்தனை..!!

0

இனப் படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள், துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இன
அழிப்புக்குள்ளானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள். இதனை யாழ்.பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக மாணவர் ஒன்றியம் சிந்திக்கவேண்டும்”இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் கேட்டுள்ளார்.

இத்தகைய தரப்புகளை தவிர்த்து ஏனைய தரப்புக்கள் முள்ளிவாய்க்காலில் பொது அஞ்சலி நிகழ்வை முன்னெடுத்தால் அதனை பரிசீலிக்க தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(20)பத்திரிகையாளர் சந்திப்பை அவர் நடத்தினார்.

தமிழ் தரப்புக்கள் ஒன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு பற்றி செய்தியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முள்ளிவாய்க்கால் ஒன்றும் வெள்ளை பூசுகின்ற மையமல்ல எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாம் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை மதிக்கின்றோம்.அதனோடு இணைந்து பல சந்தர்ப்பங்களில் பயணித்துள்ளோம்.
இந்த விடயம் தொடர்பில் எவரும் எம்முடன் பேசவில்லை.நாம் மாணவர் ஒன்றியத்தை குறித்த விடயம் தொடர்பில் பேச அழைத்துள்ளோம்.ஆனால் இதுவரை எவரும் வந்திருக்கவில்லை.

இனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள், அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள், துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் கால்பதிக்க அருகதையற்றவர்கள்.
கொலைகாரர்களையும் இத்தகைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அஞ்சலி செலுத்த வாருங்கள் என அழைப்பது அவர்களை தப்பவைக்கின்றதொரு முயற்சியே.

சிலர் ஒன்றித்து அஞ்சலிப்பது மக்களது விருப்பமென்கிறனர். எங்களுக்கு எமது மக்களின் எண்ணங்கள்,நிலைப்பாடுகள் தெரியும்.அவர்கள் என்றுமே இவ்வாறானவர்களை மன்னிக்கப்போவதுமில்லை – என்றார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு.

எனினும் தலைவர் வே. பிரபாகரனின் கட்டளைக்குஙமைவாக கஜேந்திரகுமார் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக வெளிநாட்டில் தங்கியிருந்தார் – பணியாற்றினார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தார். அவரும் வெளிநாட்டிலேயே தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையிலேயே ஏனைய தமிழ் தரப்புக்கள் மீது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*