;
Athirady Tamil News

வடக்கு மீன்பிடித்துறையின் அபிவிருத்திக்கு ரூ.158 மில்லியன் ஒதுக்கீடு..!!

0

வடக்கு மாகா­ணத்­தில் 158 மில்­லி­யன் ரூபா­வில் மீன்­பிடித் துறை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இந்தத் திட்­டங்­கள் பிர­தே­ச செய­ல­கங்­க­ளின் ஊடாக கிராம மட்­டத்­தில் நான்கு ஆண்டு செயற்றிட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இவ்­வாறு ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் சமூக அபி­வி­ருத்தி செயற்­திட்ட சிறப்பு அதி­காரி சுதர்­சன அனோ­யன் தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தில் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யின் நிதி உத­வி­யு­டன் மீன்­பிடி அமைச்சால் பல்­வேறு அபி­வி­ருத்திப் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வுள்­ளன. உட்­கட்­டு­மான வச­தி­கள், பண்ணை வளர்ப்பு பயிற்சி நெறி­கள், விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­கள், கடன் திட்­டங்­கள், உற்­பத்­தி­களை சந்தைப் படுத்­தல் போன்ற பல்­வேறு வேலைத் திட்­டங்­கள் இதில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

உட்­கட்­டு­மான வச­தி­க­ளாக யாழ்ப்­பா­ணம் பருத்­தி­துறை துறை­மு­கம், மற்­றும் மன்­னார் பேசாலை துறை­மு­கம் சீர­மைக்­கப்­ப­ட­வுள்­ளன. மூன்று மாவட்­டங்­க­ளில் கட­லில் நங்­கூ­ரமி­டக்­கூ­டிய கட்­டட தொகுதி, மற்­றும் 4 மாவட்­டங்­க­ளில் மீன்­பிடி சார்ந்த கரை­யோரப் பகு­தி­கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடல் அட்டை ,மன்­னார் மாவட்­டத்­தில் நண்டு வளர்ப்பு தொடர்­பான பண்ணை என்­ப­ன அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. கிளி­நொச்சி பள்ளிக் குடா­வில் கடல் உற்­பத்தி சார்ந்த ஆய்­வு­கூ­டம், மன்­னார் மாவட்­டத்­தில் கடல் உணவு உற்­பத்தி சார் பயிற்சி நிலை­யம் இந்த செயற்­திட்­டத்­தின் கீழ் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

கடல் உணவு சார்ந்த உற்­பத்­தி­கள் மற்­றும் தொழில் பயிற்­சி­கள் மூலம் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­தும் நோக்­கில் யாழ்ப்­பா­ணத்­தில் 54 கிரா­மங்­க­ளி­லும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 30 கிரா­மங்­க­ளி­லும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 31 கிரா­மங்­க­ளி­லும், மன்­னார் மாவட்­டத்தில் 22 கிரா­மங்­க­ளி­லு­மாக வடக்கு மாகா­ணத்­தில் 137 கிரா­மங்­க­ளில் பயிற்­சி­கள் , அபி­வி­ருத்­தி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இந்தச் செயற்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு தனி­யான அலு­வ­ல­கம் 21 அதி­கா­ரி­களை கொண்டு செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் தனி­யான அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்டு செயற்­திட்­டம் நடை­பெ­றும்.

எமது இந்த செயற்­திட்­டத்­தின் மூலம் பெண்­க­ளின் வாழ்­வா­தா­ர­மும் உயர்த்­தப்­ப­ட­வுள்­ளது. ஒவ்­வொரு கிரா­மத்­தி­லும் 10 பெண்­கள் தொழில் முயற்­சி­யா­ளர் களை உரு­வாக்க உள்­ளோம். மொத்­த­மாக 100 கிரா­மங்­க­ளில் 1000 பெண் தொழில் முயற்­சி­யா­ளர்­களை உரு­வாக்­க­வுள்­ளோம்.

மீன்­பிடி சார்ந்த உற்­பத்­தி­களை அதி­க­ரித்­தல், ஏற்­று­மதி செய்­தல், பண்ணை வளர்ப்பு,கரு­வாடு உற்­பத்தி , காளான் உற்­பத்தி , சங்கு சிப்­பி­யா­லான அழ­கு­சா­தனப் பொருள்­கள் உற்­பத்தி, போன்ற பல்­வேறு துறை­க­ளுக்கு இவர்க­ளுக்கு பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு அவர்­க­ளின் வாழ்­வ­தா­ரத்தை உயர்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இந்­தத் திட்­டத்­தில் 80 வீத­மான பெண்­கள் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ள­னர்.

பய­னா­ளி­கள் இனம் காணப்­பட்டு அவர்­க­ளுக்­கான பயிற்­சி­கள்,முன்­மொ­ழிவு எழு­தும் முறை அவர்­க­ளின் தேவை என்­பன கண்­ட­றி­யப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.இதற்கு அனைத்து துறை­சார்ந்­த­வர்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் வேண்­டும் என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 18 =

*