;
Athirady Tamil News

வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் மீட்பு – மாயமான வெளிநாட்டு பெண் கொலையா?..!!

0

திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்காடு பகுதியில் உள்ள ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மிகா (வயது 33) என்ற பெண் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் அவரது சகோதலி லீஜி என்பவரும் தங்கியிருந்தார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மிகா திடீரென மாயமானார். இதனால் லீஜி, தனது சகோதரியை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி திருவனந்தபுரம் கோவளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மிகாவை தேடி வந்தனர்.

மிகா காணாமல் போனது பற்றி அறிந்த அவரது கணவர் ஆண்ட்ரூசும் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்தார். லீஜியும், ஆண்ட்ரூசும் சேர்ந்து மிகாவை கேரளா முழுவதும் தேடினர். மிகாவை தேடி ஊர், ஊராக அலைந்தனர். மிகா காணாமல் போன விவரத்தை துண்டுபிரசுரங்களாக அச்சடித்து முக்கிய இடங்களிலும் ஒட்டினர். நேற்று அவர்கள் காசர்கோடு பகுதியில் மிகாவை தேடினர்.

இந்தநிலையில் கோவளம் காட்டுப்பகுதியில் நேற்று ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை வேறு, உடல் வேறாக தனியாக கிடந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகள், பெண் பிணத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். பிணமாக கிடந்த பெண் இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கும் என தெரிகிறது. இதனால் உடல் அழுகி அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது.

அந்த பெண் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் உருவத்தை கொண்டு அவர் மாயமான வெளிநாட்டு பெண் மிகாவாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அவரது பிணத்தை அடையாளம் காட்டுவதற்காக காசர்கோடு பகுதியில் இருந்த மிகாவின் கணவர் மற்றும் சகோதரியை திருவனந்தபுரத்துக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர்.

அவர்கள் அடையாளம் காட்டிய பிறகே பிணமாக கிடந்தது மிகாவா? அல்லது யார்? என்பது தெரியவரும். அடையாளம் காண முடியாவிட்டால் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிணமாக கிடந்த பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்ற விவரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − two =

*