;
Athirady Tamil News

வவுனியா நகரபிதாவை கௌரவிக்கும் நிகழ்வு..!! (படங்கள்)

0

வவுனியா நரசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நகரபிதா ராசலிங்கம் கௌதமனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21) தேக்கவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் ஆர்.அருந்தவராசாவினால், வவுனியா நகரபிதா ராசலிங்கம் கௌதமன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

நிகழ்வில் ஈழமக்கள் பரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்து இருந்த போதிலும், விகிதாசார பட்டியலில் தெரிவானதும், அவரே இப்போது நகரசபை தலைவராக தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து வெற்றி ஈட்டி உள்ளதும்,

இவர் மட்டுமல்ல ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்ததுடன், இவர்களில் மூவரும் “தேசிய பட்டியல்” மூலமே தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா & தீபன்..

***தொடர்புபட்ட செய்திகளுக்கு..

விடுதலைப் புலிகளின் பாணியிலேயே, வவுனியா நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்! -நடந்தது என்ன?

வவுனியா நகரசபையை இழந்த கோபத்தில், த.தே.கூட்டமைப்பினர் களேபரம்!! (VIDEO)

ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை, ரிசாட்டின் தம்பி கடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு!! (VIDEO)

வவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 4 =

*