;
Athirady Tamil News

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி பதவியேற்பு..!!

0

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு 11ஆவது கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த ரனவன இராணுவ சம்பிரதாயத்துடன் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இந்த நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மேஜர் ஜெனரல் நிஷாந்த ரனவன கிளி நொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பதவி பொறுப்பேற்பதற்கு முன் 11ஆவது படைப் பிரிவில் கட்டளை தளபதியாக சேவை புரிந்தார்.

இப் புதிய கட்டளை தளபதிக்கு இராணுவ சம்பிரதாயத்துடன் 24 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 3 ஆவது கஜபா படையணியினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி உத்யோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டபின் அவர் தனது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றார்.இதன்போது வளாகத்தில் சந்தன மரக் கன்றும் நடப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன புதிய பதவி நிலை பிரதாணியாக நியமிக்கப்பட்டதின் பின் இப் படைத் தலைமையகத்துக்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த ரனவன கடமை பொறுப் பேற்றமை குறிப்பிடத்தக்கது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + nineteen =

*