;
Athirady Tamil News

கொல்கத்தாவில் திடீர் மழை… பஞ்சாபின் கிறிஸ் கெயில் ரன் மழை பாதிப்பு..!! (வீடியோ)

0

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், தமிழர்கள் கேப்டன்களாக உள்ள கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் சேர்த்தது. அப்போது திடீரென மழை பெய்ததால், ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெயில் 49, ராகுல் 46 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனின் 18வது ஆட்டம் கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த சீசனில் விளையாடும் 8 அணிகளில் 7 அணிகளின் கேப்டன்களாக இந்தியர்கள் உள்ளனர். அதில் இரண்டு அணிகளின் கேப்டன்களாக தமிழர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணியும் முதல் முறையாக நேரடியாக மோதுகின்றன.

கொல்கத்தா அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்தில் உள்ளது. கெயில், ரசல் இடையே போட்டி பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயிலும் கொல்கத்தாவின் ஆந்தரே ரசலும் முழு பர்மில் உள்ளனர். இருவரில் யாருடைய அதிரடி எடுபடபோகிறது என்பதைப் பொறுத்தே, அணிகளின் வெற்றி இருக்கும். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சுனில் நரேன் கொல்கத்தாவுக்காக விளையாடுகிறார்.

அவருடைய பந்துவீச்சை கெயில் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதும் இந்த ஆட்டத்தின் சுவாரசியத்தை கூட்டியுள்ளது. வலுவான அணிகளை வென்றது பஞ்சாப் அணி இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் டெல்லியை வென்றது. பெங்களூருவிடம் தோல்வியடைந்த பஞ்சாப், அதற்கடுத்த ஆட்டங்களில் மிகவும் வலுவான சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளை வென்றது. ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்குகிறது. ஹாட்ரிக்கிலும் போட்டி அதே நேரத்தில் முதல் போட்டியில் பெங்களூருவை வென்ற கொல்கத்தா அணி, சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது.

ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த கொல்கத்தா அணி, அதற்கடுத்த ஆட்டங்களில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் வென்றுள்ளது. இந்த அணியும் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. கலக்கும் தமிழர்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பதாலும், தமிழர்கள் கேப்டன்களாக உள்ள அணிகள் முதல் முறையாக மோதுகின்றன என்பதாலும், ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கியுள்ளதாலும், இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சவாலை சமாளிக்குமா பஞ்சாப் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து விழ, கிறிஸ் லைன் 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் சேர்த்தது. அப்போது திடீரென மழை பெய்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ் கெயில் 49, ராகுல் 46 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு 70 பந்துகளில் 96 ரன்கள் எடுக்க வேண்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*