;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு..!!

0

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 12.5.2018 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் காந்திநகர் தொகுதியில் கர்நாடக மாநில கழகச் செயலாளர் யுவராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமாரும், கோலார் தங்கவயல் தனித்தொகுதியில் கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் அன்பு போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*