;
Athirady Tamil News

35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது..!!

0

வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 150 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், 02 ஹேஷ் வகைப் போதைப் பொருளும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 13 =

*