;
Athirady Tamil News

காலநிலையில் மாற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!

0

பலப்பிட்டியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசம் இன்று இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இதனால் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை கடல் பிரதேசத்தில் இரவு வேளையில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல்கொந்தளிப்பினால் கடலின் அலைகள் சிறிய அளவில் தரைக்கு வரக்கூடும் என்பதால் கரையோர மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் கடற்றொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை தென் தமிழகத்தில் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுடன், இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*