;
Athirady Tamil News

பளை தொட­ருந்­துக் கட­வை­யில் செயலிழந்த ஒலி எழுப்­பும் கருவி..!!

0

பளை, பெரி­ய­ பளைப் பகு­தி­யில் அமைந்­துள்ள தொட­ருந்­துக் கட­வை­யில் உள்ள ஒலி எழுப்­பும் கருவி நீண்ட நாள்­க­ளாகப் பழுத­டைந்து காணப்­ப­டு­கிறது எனப் பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் பல்­வேறு பாது­காப்பு அற்ற தொட­ருந்­துக் கட­வை­கள் காணப்­ப­டு­கின்ற நிலை­யில் பாது­காப்­புக் கட­வை­கள் என அடை­யா­ளம் இடப்­பட்ட கட­வை­க­ளும் சில குறை­பா­டு­க­ளு­டன் காணப்­ப­டு­கின்­றன.

அந்­த­வ­கை­யில் பளை, பெரி­ய­பளைப் பகு­தி­யில் அமைந்­துள்ள பாது­காப்புக் கட­வை­யில் உள்ள ஒலி எழுப்­பும் கரு­வி­யின் ஒரு பக்­கம் ஒலி எழுப்­பாத நிலை­யில் மிக நீண்ட நாள்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாகப் பளை தொட­ருந்து நிலை­யத்­தில் முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்ட போதும் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பாக பளை பொலிஸ் நிலை­யத்­தின் நிலைய முகா­மை­யா­ள­
ரி­டம் கேட்­ட­போது இது தொடர்­பாக பொறி­யி­யல் பிரி­வுக்குத் தக­வல் வழங்கி உட­ன­டி­யாச் சீரமைப்பு செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் எனத் தெரி­வித்­தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 17 =

*