;
Athirady Tamil News

மாடல் மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றவாளிக்கு 16 வருடம் சிறை..!!

0

விளம்பர மாடல் ஒருவர் மீதும் அவரது உறவினர் மீதும் காரின் ஜன்னல் வழி ஆசிட் ஊற்றிய வழக்கில் குற்றவாளி ஜான் டாம்லின்க்கு 16 வருட சிறை தண்டனை எனத் தீர்ப்பாகியுள்ளது.

கடந்த வருடம் ஜூன் 21ஆம் தேதி கிழக்கு லண்டனில் உள்ள பெக்டன் எனும் நகரில் ரேஷம் கான் (21) ஜெமீல் முக்தர் (37) எனும் இருவரும் தங்களது காரில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

ஓடிக் கொண்டிருந்த காரின் ஜன்னல் வழியே ஆசிட் ஊற்றிய டாம்லின் பின் தப்பியிருக்கிறான். சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒரு வருடம் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது.

தாக்கப்பட்ட மாடல் ரேஷம் கானிற்கும், அவரது உறவினருக்கும் முகம் மற்றும் உடலில் பல இடங்கள் பாதிப்படைந்து விட்டது.

பாதிக்கப்பட்டவர்களை அவர்களது குடும்பம் தேற்றி வரும் வேளையில் இந்த தீர்ப்பு பற்றி ரேஷம் கானிடம் கேட்கப்பட்ட போது அந்த நிகழ்வை விவரிக்கும் சமயம் உடைந்து கதறியிருக்கிறார் கான்.

தனது பிறந்த நாளன்று நடந்த இந்த சம்பவத்தால் வாழ்நாள் முழுதும் இந்தக் காயங்களை அவர் சுமந்துதான் ஆக வேண்டும் எனும் கான் தீவிர மனசிதைவுக்கும் மனப்பதட்டத்திற்கும் ஆளாகி இருக்கிறார்.

தற்போது தன்னம்பிக்கையோடு இருப்பதாக சொல்லும் கான் இதற்கு முன் நிறைய முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

இவருடன் பயணித்த இவரது உறவினர் இவரை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார் எனும் கான் அதற்கான காரணத்தை கூறும்போது நம் கண்களும் கலங்குகின்றன.

ஆசிட் பட்ட உடன் இருவருமே துடி துடித்த நிலையில் முதலில் நீரை எடுத்து கானின் முகத்தில் வீசியிருக்கிறார் முக்தர். தன்னைக் காப்பற்றிக் கொள்ளாமல் கானைக் காப்பாற்ற முயற்சித்தால் அவரது காயங்கள் இன்னமும் ஆழமாகவும் பாதிப்புகள் அதிகமாகவும் ஏற்பட்டிருப்பதாக கான் தெரிவித்தார்.

தனது பிறந்த நாளில் தனது முகத்தை தொலைத்த நிகழ்வை இன்னமும் மறக்க முடியாத கான் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும்போதெல்லாம் அந்த சம்பவத்தை மறக்க முடியாமல் நடுங்குகிறார்.

கான் உடன் பயணித்த அவரது உறவினர் முக்தரும் இதே போல மன வேதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார். பலமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

ஆசிட் வீச்சு மூலம் பாதிக்கப்பட்ட முகத்தோடு வெளியே போகும்போது மக்கள் வித்யாசமாக பார்ப்பதால் மனமுடைந்து போயிருக்கிறார் முக்தர். விபத்திற்கு முன்பிருந்த முக்தர் போலத் தன்னால் இருக்கமுடியவில்லை என்று வேதனைப்படுகிறார்.

உடலில் மட்டுமல்லாமல் மனத்தளவிலும் காயப்பட்டுள்ள முக்தர் பழைய நினைவுகளால் குடும்பத்தை விட்டு நகர பயப்படுகிறார். இன்னமும் அந்த ஆசிட் பட்ட வலியிலிருந்து மீள முடியாமல் இரவுகளில் துன்பப்படுகிறார்.

‘என் சுயமதிப்பீடு பூஜ்யம், என் எதிர்காலம் முடிந்துவிட்டது, எனக்கு இப்படியாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலவீனமடைந்து விட்டேன் ” எனும் முக்தரின் கண்ணீர் பேச்சு கேட்பவரை வேதனை செய்கிறது. அவரது உடல் மற்றும் மன காயங்கள் காரணமாக அவர் மீண்டும் வேலை செய்ய முடியாது என்றும் அஞ்சுகிறார்.

இத்னைக்கும் காரணமான இரண்டு பேரின் உடலையும் வாழ்வையும் சிதைத்த டாம்லின், கம்பிகளுக்குப்பின் ஒரு நீல டிராக்ஸ் மற்றும் ஒரு பெரிய வெள்ளி சிலுவை அணிந்து எந்தவித உணர்ச்சியுமின்றி அமைதியாக அமர்ந்திருக்கிறான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 12 =

*