;
Athirady Tamil News

கணவனின் மர்ம உறுப்பை அறுத்த பெண்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முத்தம் கொடுத்த புகைப்படம்..!!

0

ரஷ்யாவில் கணவனின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரஷ்யாவின் Tatarstan பகுதியின் Vasilyevo கிராமத்தைச் சேர்ந்தவர் Lira Plaksina(47). கடந்த அக்டோபர் மாதம் இவரின் வீட்டிற்கு சென்ற மது அருந்திய நிலையில் சென்ற முன்னாள் கணவர் பிரச்சனை செய்துள்ளார். அதன் பின் அவரிடம் உறவு வைக்க முயன்றுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த Lira Plaksina உடனடியாக சமயலறையில் பயன்படுத்தப்படும் கத்திய எடுத்து அவரின் மர்ம உறுப்பை அறுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அங்கிருந்த ஷோபாவில் அழுத நிலையில் இருந்துள்ளார். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

அவரின் வலது இடுப்பு பகுதியில் அதிக அளவில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள் Lira Plaksina-க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததனர்.

நீதிமன்றத்திற்கு Lira Plaksina அழகான கருப்பு நிற உடையில் வந்திருந்தார். தீர்ப்புக்கு பின் பொலிசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, அவர் எந்த ஒரு கவலையுமின்றி அங்கிருந்தவர்களை நோக்கி முத்தமிட்டு சென்றுள்ளார்

அதன் பின் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன் மகிழ்ச்சியோடு சிறைக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரது உறவினர்கள் இவரின் முன்னாள் கணவர் இவரை ஏமாற்றி மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − sixteen =

*