;
Athirady Tamil News

கங்காருவை கல்லால் அடித்து கொலை செய்த சீனர்கள்: நெஞ்சை உருக்கும் புகைப்படம்..!!

0

சீனாவில் கங்காருவை சுற்றுலாப் பயணிகள் கல்லால் அடித்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

சீனாவின் Fujian மாகாணத்தில் Fuzhou என்ற பூங்கா இயங்கி வருகிறது. இங்கு இருக்கும் விலங்குகளை பார்ப்பதற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அங்கிருந்த 12 வயது மதிக்கத்தக்க பெண் கங்காருவை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் விருப்பம் போல் அசைவுகளை செய்ய முயற்சி செய்துள்ளனர்

ஆனால் கங்காரு அதை கேட்காமல் இருந்துள்ளதால், கல்லை வைத்து எறிந்தாவது கேட்கவைத்துவிடலாம் என்று கருதி தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட பெரிய கற்களை அதன் மீது வீசியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த கங்காருவிற்கு பூங்காவில் இருந்த ஊழியர்கள் மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி கங்காரு இறந்துள்ளது

இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், இதை யார் செய்தார்கள் என்பது தெரியவில்லை, இங்கிருக்கும் சிசிடிவி கேமாராக்களை பார்த்து வருகிறோம் அதன் பின் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பு இருந்த கங்காரு அதன் பின் கல்லால் தாக்கப்பட்டு அங்கிருக்கும் சாலையில் சுருண்டு விழுந்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்ணீர் வரவைத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 10 =

*