;
Athirady Tamil News

சுவிஸ் குடியுரிமை கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

0

விதிகள் கடுமையாக மாற இருப்பதால் அதற்குமுன் விரைந்து குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்குமாறு கடிதம் ஒன்றை அனுப்பியதையடுத்து சூரிச்சில் சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

மே 2017க்கும் மார்ச் 2018க்கும் இடையே கூடுதலாக 2900 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.அவை பரிசீலனையிலிருப்பதாக சூரிச் நகரம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

2017 ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் 40,000 பேருக்கு அனுப்பப்பட்ட கடிதம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது அலுவலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக நகர மேயர் Corine Mauch தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வலது சாரியினர் இந்த கடிதம் சட்டப்பூர்வமானதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சூரிச் நிர்வாகம் இடது சாரியினரை பெரும்பான்மையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த சுவிட்சர்லாந்தை ஒப்பிடும்போது சூரிச்சில் வாழ்பவர்களின் மூன்றில் ஒருவர் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் ஆவார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தின் குடியுரிமைச் சட்டம் மாற்றப்பட்டது.

ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெற வேண்டுமானால் அவர் குறைந்தது 12 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் போதும் என்று ஆக்கப்பட்டது.

அதே நேரத்தில் மொழிப்புலமையும் ஒரு குறிப்பிட்ட cantonஇல் தொடர்ந்து குறிப்பிட்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டன. நீண்ட கால C residency permit வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சூரிச் நகரில் வசித்துவந்த 3,397 வெளி நாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றனர். இது முந்தைய ஆண்டைவிட 645 அதிகமாகும். அவர்கள் 112 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அவர்களில் பெரும்பான்மையோர் ஜேர்மனி, இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என சூரிச் நகர அறிக்கை தெரிவிக்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 6 =

*