;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் கஞ்சா மீட்பு..!!

0

யாழ்ப்­பா­ணம், பருத்­தித்­துறை ஆகிய இடங்­க­ளில் கஞ்சா போதைப் பொருள் பொதி­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் நாயன்­மார்க்­கட்­டுக் குளத்­த­டியை அண்­மித்து ரோந்து சென்ற பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் அந்த இடத்தை அண்­மித்­தி­ருந்­தி­ருந்த சந்­தே­க­ந­பர்­கள் தமது மோட்­டார் சைக்­கிள் ஒன்­றை­விட்­டுத் தப்­பி­யோ­டி­னர்.

அவர்­க­ளது மோட்­டார் சைக்­கி­ளு­டன் 500 கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்­கப்­பட்­டது. பருத்­தித்­துறை தம்­ப­சிட்­டி­யில் 2 பெண்­கள் 250கிராம் கஞ்சா பொதி­க­ளு­டன் வீடு ஒன்­றில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளில் 50 வய­து­டை­ய­வர் பருத்­தித்­து­றை­யைச் சேர்ந்­த­வர். 36 வய­து­டை­ய­வர் முல்­லைத்­தீ­வைச் சேர்ந்­த­வர். கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் அங்கு சென்ற பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் இரு­வ­ரை­யும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­னர். அவர்­க­ளது இடுப்­பி­லி­ருந்து கஞ்சா பொதி­கள் மீட்­கப்­பட்­டன.

பிற­இ­டத்­தைச் சேர்ந்த இரு­வ­ரும் கஞ்சா விற்­ப­னை­யு­டன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­னரா என்­றும் விசா­ரணை நடத்­து­வ­தா­கப் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 5 =

*