;
Athirady Tamil News

சங்கிலி அறுத்தவர்கள் அலைபேசியை கைவிட்டு தப்பியோட்டம்..!!

0

சங்­கி­லி­யைப் பறித்த கொள்­ளை­யர் தப்­பி­ ஓ­டும்­போது தமது அலை­பே­சி­யைத் தவ­ற­விட்­ட­னர். சிசிரிவி கமரா கைகொ­டுத்­த­தால் கொள்­ளை­யர் தப்ப, அவர்­கள் வந்­தி­ருந்த மோட்­டார் சைக்­கிளின் உரி­மை­யா­ளர் மாட்­டி­னார்.

இந்­தச் சம்­ப­வம் சித்­தங்­கேணி பிள்­ளை­யார் கோவி­ல­டி­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை இடம்­பெற்­றது. மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற கொள்­ளை­யர் இரு­வர் வீடு ஒன்­றின் முன்­பாக நின்று முக­வரி கேட்­ப­து­ போல் பாசாங்கு செய்து பெயர் ஒன்­றைக்­கூ­றிக்­கேட்­டுள்­ளார்.

அந்­தக் குடும்­பப் பெண்­ணுக்கு கொள்­ளை­யர் கேட்ட பெயர் தெரி­யா­த­தால் அந்த இடத்தை அண்­மித்து நின்­றி­ருந்த மற்­றொ­ரு­வரை அழைத்­த­போதே கொள்­ளை­யர் பெண்­ணி­ட­மி­ருந்து சங்­கி­லியை அறுத்­துச் சென்­ற­னர். அவர் கூக்­கு­ர­லிட அவர கண­வ­னும் அந்த இடத்தை அண்­மித்­த­போது கொள்­ளை­யர் தப்­பி­யோ­டி­னர்.

அதன்­போது அவர்­க­ளில் ஒரு­வ­ரது அலை­பேசி தவறி வீழ்ந்­து­விட்­டது. தம்­மைப் பிடித்­து­வி­டு­வார்­களோ என்ற அச்­சம் கார­ண­மா­கவோ கவ­னிக்­கா­மலோ அவர்­கள் இந்த இடத்­தி­லி­ருந்து தப்­பி­யோ­டி­னர். ஆனால் வீழ்ந்த அலை­பே­சியை அவர்­கள் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்து வழக்­குப்் பதிவு செய்­த­னர்.

மூன்­ற­ரைப் பவுண் சங்­கிலி கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­தாக முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டது. இது­ த­விர, கொள்ளை நடந்த இடத்­தில் சிசிரி கமரா பொருத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­ மூ­ல­மாக கொள்­ளை­யர் பய­ணித்த மோட்­டார் சைக்­கிள் இலக்­கம் அடை­யா­ளங்­கள் பதி­வா­கின.

அத­ன­டிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்­த­வ­ரது பெய­ரில் அது பதி­வா­கி­யுள்­ளமை தெரி­ய­வந்­தது. அவர் கைது செய்­யப்­பட்­டார். பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கி­றார். கொள்­ளை­யர்­கள் இன்­னும் பிடி­ப­ட­வில்லை. தலை­ம­றை­வா­கி­யுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*