;
Athirady Tamil News

ஆப்கனில் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 9 பேர் பலி..!!

0

பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் இன்று நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தான் கொண்டு வந்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தான்.

இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − ten =

*