;
Athirady Tamil News

வினாடி-வினா போட்டி: அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்..!!

0

அமெரிக்காவில் ஜார்ஜியாவை சேர்ந்தவர் துருவ் கவுர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஐவி லீக் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஜியோ பார்டி கல்லூரி சாம்பியன்ஷிப்புக்கான வினாடி-வினா போட்டி நடந்தது. அதில் துருவ் கவுர் மற்றும் 14 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் துருவ் கவுர் வெற்றி பெற்றார்.

அவருக்கு ரூ.66 லட்சம் (1 லட்சம் டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகையை எப்படி செலவழிப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை என துருவ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் உயர் நிலைப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டியில் மாநில சாம்பியன்ஷிப் பட்டம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + eight =

*