;
Athirady Tamil News

தொழிற்­சாலை முகா­மை­யா­ள­ருக்கு விளக்­க­ம­றியல்..!!

0

ஹொரணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெல்லப்­பிட்­டிய பகு­தியில் உள்ள இறப்பர் தொழிற்­சா­லையின் அமோ­னியா தாங்­கிக்குள் விழுந்து ஐந்­துபேர் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட நி­று­வ­னத்தின் முகா­மை­யாளர் ரட்­ண­சிறி எதி­ரி­சிங்­கவை எதிர்­வரும் 25ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை கைது செய்­யப்­பட்ட குறித்த முகா­மை­யாளர் இரவு முழு­வதும் இடம்­பெற்ற விசா­ர­ணை­யினை அடுத்து நேற்று முற்­பகல் ஹொரணை பதில் நீதிவான் காந்தி கன்­னங்­கர முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே இவ்­வாறு விள்­ளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பாரா­மு­க­மா­கவும் பாது­காப்பு விதி­மு­றை­களை கபை­பி­டிக்­காமை ஊடா­கவும் ஐநது உயிர்கள் பலி­யா­வ­தற்கு கார­ண­மாக இருந்தார் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் தண்­டனை சட்­ட­கோ­வையின் 297,277 ஆகிய அத்­தி­யா­யங்­களின் பிர­காரம் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மொன்றை புரிந்­துள்­ள­தாக பொலிஸார் நேற்று நீதி­மன்­றுக்கு அறிக்கை தாக்கல் செய்­தனர். அதன்­ப­டியே அவர் எதிர்­வரும் 25ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

இத­னி­டையே இந்த அன­ரத்­தத்­தின்­போது உய­ரி­ழந்த 41 வய­தான பியந்­த­கு­மார பெரேரா, 32 வய­தான திலிப் கசுன், 28 வய­தான லால்புஷ்;ப குமார, 23 வய­தான வருண சந்­தி­ர­சே­கர, 44 வய­தான ஆரி­ய­பால பெரேரா, ஆகி­யொரின் சட­லங்கள் மீதான பிரேத பரி­சோ­த­னை­களும் நேற்று இடம்­பெற்­றன.

அத்­துடன் சம்­பவம் இடம்­பெற்ற தொழிற்­சா­லைக்கு நேற்று அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் சென்று விஷேட சோதனை நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்தார். குறித்த தொழிற்­சாலை உரிய முறையில் கழி­வ­கற்றல் செயற்­பாட்டை முன­னெ­டுக்­க­வில்லை என குற்றம் சாட்டி அதனால் தமது கிரா­மத்­திற்கு பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக கூறியும் ஊர் மக்­களும் இந்­நி­று­வ­ன­த­தற்கு எதி­ராக போராட்டம் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர்.

எவ்­வா­றா­யினும் நிலைமை கைமீறி செல்­வதை மேல­திக பொலிஸ் படை ஊடாக பொலிஸார் தடுத்­தனர். இத­னை­ய­டுத்து நேற்­றைய தினம் அந்த தொழிற்­சா­லைக்கு விஜயம் செய்த மத்­திய சுற்­றாடல் அதி­கார சபையின் அதி­கா­ரிகள் உரிய கழி­வ­கற்றல் நிய­மங்கள் பின்­பற்­றப்­ப­டாமை தொடர்பில் இந்­நி­று­வ­னத்தில் சுற்­றாடல் அறிக்­கையை இரத்து செய்­தி­ருந்­தனர்.

இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிறை­வுறும் வரையில் இந்த இரத்து அமுலில் இருக்கும் என அறிய முடி­கின்­றது. இதனிடையே இந்த தொழிற்சாலையை முற்றாக இழுத்து மூட நடவடிக்கை எடுப்பதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று அவர் அப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*