;
Athirady Tamil News

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பின்னனியில் பணக்கொடுக்கல் வாங்கல்..!!

0

நிட்டம்புவ அத்தனகல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என்பதும் தெரியவந்துள்ளது.

வெயாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாமர இந்திரஜித் எனும் குறித்த சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர், உயிரிழந்த வர்த்தகரின் மணல் அகழ்வு வியாபாரத்தின் ஊழியராகச் செயற்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

4 பேர் கொண்ட குழுவினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் குறித்த பகுதிக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கும் 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நிட்டம்புவ அத்தனகல்ல பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 27 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவரும் அடங்குவதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*