;
Athirady Tamil News

ஏழாலை ஜொனியன்ஸ் சனசமூக நிலைய எண்ணங்களின் சங்கமம்..!! (படங்கள்)

0

ஏழாலை ஜொனியன்ஸ் சனசமூக நிலைய எண்ணங்களின் சங்கமம் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன கலந்து கொண்டார்.

ஏழாலை ஜொனியன்ஸ் சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட எண்ணங்களின் சங்கமம் நிகழ்வு இன்றைய தினம் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணியளவில் சுன்னாகம் சூராவத்தையில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தில் சனசமூக நிலையத்தலைவர் கமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்டக்குருமுதல்வர் வண.தேவதாசன் அடிகளார் மற்றும் சூராவத்தை முத்துமாரிஆலய பிரதம குரு மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தேவாலய பங்குத்தந்தை ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கடந்தகால ஜொனியன்ஸ் சனசமூக நிலைய வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், ஏழாலைப்பிரதேசத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்த மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிறார்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

விருந்தினர்களுடன், பங்கு மக்கள், ஊரவர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*