;
Athirady Tamil News

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் மலசலகூடம் குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ளதா? நிர்வாகம் விளக்கம்..!! (படங்கள்)

0

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள மலசலகூடம் மற்றும் மலசலகூட குழி என்பன வைரவபுளியங்குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாவது
வவுனியா ஆதிவிநாயகர் ஆலயமானது வைரவபுளியங்குளம் குளத்தின் அருகில் அமையப்பெற்ற ஒரு கோவிலாகும். இக்கோவிலில் கடந்த சில மாதங்களிற்கு முன் ஆலய உற்சவ காலங்களில் கோவிலில் தங்கும் குருக்களிற்காக மலசலகூடம் ஒன்று அமைக்கப்பட்டதுடன் அதன் கீழாகவே மலசலகூட குழியும் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இவை ஆலய எல்லைக்குள்ளாகவே அமைக்கப்பட்டிருந்தது.

இதனை கடந்த சில நாட்களிற்கு முன் சில ஊடகங்களில் இவ்வாலயத்தில் அமைக்கப்பட்ட இவ் மலசலகூடத்தினையும் அதனோடு அமைந்த மலசலகூட குழியையும் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் அமைக்கப்பட்டதாகவும் இதனால் வைரவபுளியங்குளத்து நீர் மாசடைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் இவ் மலசல கூடத்தின் கழிவுகள் குளத்திற்குள் விடப்படுவதாக தெரிவித்து கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இன்று கோயில் நிர்வாக தலைவர் தெரிவிக்கையில் எம்மால் அமைக்கப்பட்ட இவ் மலசலகூடமும் அதனோடு இணைந்த குழியும் எமது கோயில் எல்லைக்குள்ளாகவே கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவிக்கையில்

கோயிலினுள் அமைக்கப்பட்ட கட்டத்திற்கு சமாந்தரமாகவே கோயில் காணிக்குள் கட்டப்பட்டிருக்கிறது. சுகாதார முறையில் மலசல கூட குழி அமைப்பதாயின் சீமெந்தினால் கட்டி பூசியிருந்தல் பற்றிரியாக்கள் வெளியே செல்லாது. அவ்வாறு இவ் மலசலகூடம் கட்டப்பட்டிருந்தால் இக்கழிவு நீர் வெளியெ செல்வதற்கான சந்தர்ப்பம் எதுவும் இல்லை. இவ்வாறான விடயங்களை ஆராயாமல் இவ்வாறான குற்றச்சாட்டை பொது நிறுவனம் ஒன்றின் மீது சுமத்தியிருப்பதாகதான் பார்க்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் சுகாதார பகுதி உரிய முறையில் கையாள வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை இன்று வடமாகான முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம்இ நகரசபை உறுப்பினர்களான க. சந்திரகுலசிங்கம்இ சு. காண்டீபன்இ திருமதி நா.லக்சனா மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்ததுடன் இப்பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*