;
Athirady Tamil News

காவடியாம் காவடி… கருத்தம்பட்டி காவடி..!! (வீடியோ)

0

தமிழர் பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை அருகே நடைபெற்றது.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் சங்கமம் கலைக்குழு சார்பில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள், கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தலையில் வைத்து காவடி ஆடுதல், மயிலாட்டம், கண்ணில் பணம் எடுத்தல், குளிர்பானம் அருந்துதல் என 10க்கும் அதிகமான பிரிவுகளில் 12 குழுவைச் சார்ந்த 400 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.மேலும் 3 வயது சிறுவர் முதல் 60 வயதுள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் தோளில் காவடியை சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக ஆடியதும் ஏணி மேல் ஏறி காவடி ஆடியதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இது குறித்து சங்கமம் கலைக்குழு ஆசிரியர் கனகராஜ் கூறுகையில், அழிந்து வரும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க கருமத்தம்பட்டி பகுதியில் காவடி ஆட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு செல்கிறோம். இது மட்டுமல்லாமல் ஒயிலாட்டம், கும்மி ஆட்டம் ஆகியவை இந்த பகுதியில் பிரபலமாகி வருகிறது என்றார்.

மேலும் இந்தக் கலைகளை கற்றுக்கொள்ள சிறுவர்கள் முதல் 60 வயதுள்ள பெண்கள், ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் இந்த பாரம்பரிய கலையை மீண்டும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + fifteen =

*