;
Athirady Tamil News

திடீர் திடீர்ன்னு உடையுதாம், சாயுதாம்..டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏர் டர்புலன்ஸால் பதட்டம்..!! (வீடியோ)

0

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏர் டர்புலன்ஸ் காரணமாக விமானத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதனால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர். இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானம் இது.

விமானத்தின் உட்பக்க பாகங்கள் உடைந்து அங்கு இருந்த பயணிகளின் மீது விழுந்துள்ளது. இதில் உள்ளே இருந்த பயணிகளுக்கு மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது. என்ன விஷயம் நடந்தது அந்த விமானம் சென்று கொண்டு இருக்கும் போதே, பாதியில் பெரிய அளவில் சத்தம் கேட்டு இருக்கிறது. இதனால் உள்பக்கம் பெரிய அளவில் பொருட்கள் ஆடி இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளின் இருக்கைக்கு மேல் பக்கம் உடைந்து விழுந்து இருக்கிறது. அங்கு இருந்த பயணிகளின், தலையில் விழுந்து காயம் ஏற்பட்டு இருக்கிறது.

அதே போல் அவசரத்திற்கு கொடுக்கப்படும், ஆக்சிஜன் டியூப்கள் வெளியே வந்துள்ளது. எத்தனை பேர் இதனால் மொத்தம் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. பயணிகள் உட்கார்த்து இருக்கும், மேற்பகுதி உடைந்து தலையில் விழுந்ததை அடுத்து மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஒரு பயணி மோசமாக காயம் அடைந்துள்ளார். பின் விமானம் தரையிறக்கப்பட்ட போது, அந்த பயணிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காரணம் விமானம் 8000 அடி தூரத்தில் இருந்து, 20,000 அடி தூரத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது, ஏற்பட்ட திடீர் பிரச்சனை காரணமாக இப்படி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. ”டர்புலன்ஸ்” எனப்படும் விமானத்திற்கும், காற்றுக்கும் இடையில் இருக்கும் உராய்வு காரணமாக ஏற்படும் பிரச்சனை அதிகமானதை அடுத்து, உட்பக்கத்தில் பாகங்கள் ஆடியது என்று கூறப்படுகிறது. மிகவும் பழைய விமானங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு விமானத்தில் ஏன் இப்படி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று விசாரணை நடத்தப்படும் என்று ஏர் இந்தியா நிர்வாகிகள் கூறியுள்ளனர். விமானம், பழைய விமானமாக இருப்பதால் இப்படி பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயணிகளை இதுகுறித்த புகார் அளிக்க இருப்பதை கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*