;
Athirady Tamil News

பிரித்தானிய ராஜகுடும்ப மரபுகளை மாற்றிய திருமணம்..!!

0

இளவரசர் ஹரி மெர்க்கலின் திருமணம் ஆண்டாண்டுகாலமாய் ஆச்சாரமாய் வாழ்ந்து வந்த பிரித்தானிய மன்னராட்சி முறைமைகளையே நவ நாகரீகமாக மாற்றப்போகிறது.

இரண்டு தலைமுறைகளுக்குமுன்வரை இன்னொருவரின் மனைவியாக இருந்தவரை மனைவியாக ஏற்றுக்கொள்வதை ராஜ குடும்பம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

ஒரு கலப்பினப் பெண், அதுவும் விவாகரத்து பெற்ற நடிகை, மணமகனை விட மூன்று வயது மூத்தவர் என்று எந்த விதத்திலும் ராஜ குடும்பத்திற்கு சற்றும் பொருந்தாத மெர்க்கலை ஆரம்பத்தில் பத்திரிகைகள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை

அவரது கலப்பினம், நடிப்பு வாழ்க்கை, முந்தைய திருமணம் ஆகியவற்றைப் பற்றி தாறுமாறாக எழுதின.

வேறு வழியின்றி இளவரசர் ஹரி மெர்க்கலைத் துன்புறுத்துவதை நிறுத்தும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்னர்தான் பத்திரிகைகள் அமைதியாகின.

பிரித்தானியாவைப் பொருத்தவரையில் ராஜ குடும்பத்தில் மெர்க்கலின் வருகை முரண்பாடான எண்ணங்களை உருவாக்கினாலும், உலக அளவில் அது ஒரு நேர்மறையான தோற்றத்தை ராஜ குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.சொல்லப்போனால் அது ஒரு புகழ்ச்சியையே பெற்றுக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது

எங்கு பார்த்தாலும் விவாகரத்து சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் சாதாரண மனிதர்களின் ஒரு பிரதிநிதியாக மெர்க்கலை உலகம் பார்க்கிறது.

அதனால் ராஜ குடும்பத்தை உற்று நோக்கும் பிரித்தானியர்களல்லாத உலக மக்களின் பார்வையில் பெரு மதிப்புக்கு உரியவராக மெர்க்கல் பார்க்கப்படுவது மட்டுமல்ல, ஒரு சாதாரண பெண்ணை இளவரசரின் மனைவியாக, பிரித்தானியாவின் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக ராஜ குடும்பம் ஏற்றுக் கொண்டதால் ராஜ குடும்பத்தின் மதிப்பையும் உலக அரங்கில் மெர்க்கல் உயர்த்திவிட்டார்.

எப்படியும் மெர்க்கலின் திருமணம் ஆச்சாரமான ராஜ குடும்பத்தையே “மாடர்ன்” ஆக ஆக்கியுள்ளதாக பத்திரிகைகள் விமர்சித்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − six =

*