;
Athirady Tamil News

Lettuce உண்ண வேண்டாம்: அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி..!!

0

ஈ.கோலை என்னும் கிருமிகளின் பாதிப்பு இருப்பதால் Romaine Lettuce-யை தவிர்க்கும்படி அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் 53 அமெரிக்கர்கள் ஈ.கோலை என்னும் கிருமிகளின் பாதிப்பு உள்ள Romaine Lettuce-யை உண்டதால் நோயுற்றிருக்கிறார்கள் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

ஒரு படி மேலே போய் Lettuceவாங்கி வைத்திருந்தால் அதை உடனே தூர எறிந்து விடுங்கள் என்று அந்த மையம் கூறியுள்ளது.

Romaine Lettuce-ல் பரவியுள்ள ஈ.கோலை என்னும் இந்த கிருமிகள் ஷிகா நச்சு என்னும் உயிர்க்கொல்லி நச்சுப்பொருளை வெளியிடுவதால் அதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்த நோய்த் தொற்றினால் 16 மாகாணங்களில் 31 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவிற்கு நோய்வாய்ப்பட்டுள்ளார்கள்

அரிசோனாவிலுள்ள யுமா பகுதியில் விளைவிக்கப்படும் Lettuce-ல் தான் பிரச்சினை என்றாலும், அந்த தயாரிப்பு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுவதால் பிரச்சினைதான்.

அதுவும் Lettuce-ஸைப் பறித்து பேக் செய்யும்போது அந்த பேக் சூடாக இருப்பதால் அந்த சூட்டில் இந்தக் கிருமிகள் ஏராளமாக பெருகிவிடும்.

அதேபோல் கடைகளில் இவை அடுக்கி வைக்கப்படும்போது நோய்க்கிருமிகள் இருக்கும் Lettuceன் பக்கத்தில் சுத்தமான Lettuce வைக்கப்பட்டால் இந்தக் கிருமிகள் அதிலும் பரவி விடும் ஆபத்து இருக்கிறது.எனவே Lettuceஸை அறவே தவிர்த்து விடுவதே நலம் என நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.

இந்தக் கிருமிகள் பொதுவாக விலங்குகளின் கழிவுகளிலிருந்து பரவுகின்றன.

நோய்வாய்ப்பட்ட விலங்குகள் Lettuce பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களில் உலவும்போதோ அல்லது சரியாக பதப்படுத்தப்படாத உரங்களை தோட்டத்திற்கு பயன்படுத்தும்போதோ இந்தக் கிருமிகள் பரவுவதாகக் கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 6 =

*