;
Athirady Tamil News

இ-சிகரெட்டை தடை செய்ய பரிசீலனை – டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..!!

0

இ-சிகரெட் விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சீமா சேகல் என்ற பெண், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் உள்ள இம்மனுவுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

இ-சிகரெட்டை ஒழுங்குபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாதபோதிலும், சில மாநிலங்கள் அதை தடை செய்துள்ளன. இ-சிகரெட்டில் நிகோடின் உள்ளது. அது, போதையை தர வல்லது. நச்சுத்தன்மையும் அதிக அளவு உள்ளது. அதனால், இதய ரத்தக்குழாய் பாதிப்பும், நுரையீரல் நோய்களும் ஏற்படும்.

மேலும், இதை புகைப்பதால், பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் உருவாகும். ஆகவே, இ-சிகரெட்டை தடை செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − seven =

*