;
Athirady Tamil News

வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்: ஏப்.23- 1616..!!

0

வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564- 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.

ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1867 – சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார். * 1896 – நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial’s Music Hall) “வாட்வில்லி” குழுவினரால் “இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது” போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

* 1905 – யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது. * 1932 – நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது. * 1940 – மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர். * 1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார் * 1948 – அரபு-இஸ்ரேல் போர், 1948: இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. * 1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது. * 1982 – கொங்க் குடியரசு அமைக்கப்பட்டது.

* 1984 – எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. * 1987 – ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். * 1990 – நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது. * 1993 – இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது. * 1993 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். * 1993 – எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர். * 1997 – அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + seven =

*